ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்ற அரசு கலை கல்லூரி மற்றும் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல ஊர்களிலிருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.
45 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 120 பேர் இந்த நேர்காணலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணல் முடிந்த பிறகு 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகவும் மீதம் உள்ள 15 இடங்களுக்கு தவறுதலாக அழைப்பு விடுத்ததாக கூறி அங்கு இருந்தவர்கள் திருப்பி அனுப்பட்டனர். இந்த குழப்பத்தின் காரணமாக அங்கு வந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இது தொடர்பாக நியூஸ் ஜே தொலைக்காட்சிக்கு அங்கு வந்த மருத்துவர்கள் கூறுகையில் " 45 பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்துவதாக கூறி 30 பேர் மட்டுமே தேர்வு செய்யபட்டனர். இது தொடர்பாக துணை இயக்குனரிடம் கேட்டபோது அவர் சரியான காரணம் கூறாமல் சென்றதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.