கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் - கொடுமை!

Update: 2021-05-28 12:02 GMT

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் மருத்துவ தேவை, அவசர நிலைமை போன்ற சமயங்களில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்லலாம் என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு காவல் துறையினர் ₹200 அபராதம் விதித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் சங்கர், இவர் தனது கர்ப்பிணி மனைவி சத்யா உடன் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில்  சென்றிருந்தார். அப்பொழுது கரந்தை பகுதியில் உள்ள எஸ்.ஐ உமாபதி ஆட்டோவை நிறுத்தினார். அவரிடம் சங்கர் அவருடைய மனைவியின் மருத்துவ ஆவணங்களை காட்டினார், ஆனால் அதை  கண்டுக்கொள்ளாத அந்த எஸ்.ஐ இ-பதிவு இல்லாமல் வெளியில் வர அனுமதி இல்லை எனவும், மாஸ்க் சரியாக அணியவில்லை என்று கூறி, ₹200 அபராதம் விதித்துள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ், "மருத்துவமனை செல்ல இ - பதிவு தேவையில்லை" எனக் கூறி, அபராதம் செலுத்த மறுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ அபராதம் கட்டவில்லை என்றால், ஆட்டோவை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டி, அபராத தொகையை வசூலித்துள்ளார்.

தமிழ அரசு மருத்துவமனைக்கு செல்ல இ-பதிவு தேவையில்லை என்று கூறியும் காவல் துறையினர் பொது மக்களிடம் அபராதம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News