ராணிப்பேட்டையில் குடிநீர் இல்லை - தி.மு.க எம்.எல்.ஏ-வை கண்டித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை மறியல்..!

Update: 2021-06-01 10:57 GMT

கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்று ராணிப்பேட்டையை சேர்ந்த கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.










ராணிப்பேட்டையில் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த மாவட்டத்தில் வாலாஜாபேட்டையை அடுத்து கல்மேல்குப்பம் என்ற கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு மலைப்பகுதியில் உள்ள 7வது வார்டில் கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் குடிநீர் சரியாக வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் பல வருடங்களாக இந்த தொகுதியில் ஆட்சி செய்தும் முறையாக குடிநீர் வசதிகள் கூட செய்து தராத அவலநிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்கள் பிரதம மந்திரி ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் குடிநீர் வசதி இல்லை என்பதை ஆட்சியாளர்கள் மனதில் வைத்துக்கொண்டு குடிநீர் இல்லாத கிராமங்களின் விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்தால் அவர்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News