ஊரடங்கு காரணமாக கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு : மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு.!
இந்தியாவில் 2-வது அலை கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது மேலும் மாநிலங்களில் இந்தக் கொரோனா தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களின் தலைநகரம் இதன் கொடூர முகத்தை காண முடிகிறது. மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் கொரோனா கட்டுக்குள் வராமல் வேகமாக பரவத் தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இருந்தது. காரணம் அதிக மக்கள் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் வாழ்வதுதான்.
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் இதனுடைய தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாநில நிர்வாகம் எடுத்த முயற்சிகளின் காரணமாக மற்றும் விதித்த ஊரடங்கு காரணமாக தற்பொழுது பாதிப்புக்களை எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. எனவே தற்பொழுது மகாராஷ்டிர மாநில அரசு ஊரடங்கு தளர்வு குறித்து அறிவித்துள்ளனர். எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ, அந்த அளவிற்கு தற்போது வேகமாக குறைந்துள்ளது என்பது ஆறுதல் கூறிய விஷயம்.
இதனால் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தளர்வுகள் வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் நிலை அளவை கட்டுக்குள் வந்துள்ள 18 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டும். மும்பையில் இன்னும் 2-ம் நிலையில்தான் உள்ளது. மேலும் பாதிப்புக்களுக்கு எண்ணிக்கை குறைந்து வரும்போது புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என அம்மாநில அமைச்சர் விஜய் வதேத்திவார் தற்போது தெரிவித்துள்ளார். ஊரடங்கு என்பதும் மக்களின் பாதுகாப்பிற்கு தான் போடப் படுகிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசின் சார்பாக அவர் கேட்டுக்கொண்டார்.