உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகள்.!

Update: 2021-06-05 01:30 GMT

தற்போதுள்ள சூழலில் அனைவருக்கும் நோயெதிர்ப்பு சத்தி மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆற்றல் வழங்குவதில் சில உணவுகள் சிறப்பாக செயல்படுகின்றன. அது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், சளி மற்றும் பல நோய்கள் ஏற்படாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். அவற்றில் சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றை சாப்பிடுவதன் மூலமாக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி உங்களுடைய உடம்பில் அதிகரிக்கிறது. 


வைட்டமின் C குறிப்பாக பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்களின் நோயெதிர்ப்பு மண்டலங்களை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. உங்கள் வைட்டமின் C நுகர்வு மேம்படுத்த, வைட்டமின் C நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிட்ரஸ் பழச்சாறுகள் மற்றும் திராட்சைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், ப்ரக்கோலி, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். 


உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க இந்த ஒமேகா-3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். சியா விதைகள், சால்மன், மத்தி, ஹெர்ரிங், டுனா போன்ற எண்ணெய் மீன் மற்றும் ஆளிவிதை போன்ற உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்டுகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருக்க, குறிப்பாக வயதான நபர்களிடையே வைட்டமின் E சத்து போதுமான அளவு இருப்பது மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி தேவையான வைட்டமின் E அளவைப் பெற, வேர்க்கடலை வெண்ணெய், கோதுமை பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News