மறதி பிரச்சனைகளை தீர்த்து, உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகள்.!

Update: 2021-06-07 01:00 GMT

மறதி என்பது இயல்பான ஒரு விஷயம் தான். அது வரம் என்றும் சொல்லலாம் அதுவே ஒரு சமயத்தில் சாபம் என்றும் சொல்லலாம். மறதி இருந்தால் தான் மனிதனால் மேலும் அவனது வாழ்க்கையை தொடர முடியும். கெட்டதை மறந்து நல்லதை நினைவில் கொண்டு வாழ்பவர்கள் பெரும்பாலும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பர். ஆனால் எல்லாவற்றையும் மறந்துவிடுவது மிகவும் ஆபத்தான ஒன்று தான்.


மறதியே ஒரு வியாதி ஆனவர்கள் கூட இருக்கிறார்கள். சாதாரணமாக சாவியை எங்கோ வைத்துவிட்டு தேடுவது கூட மறதி பிரச்சினை. ஆனால் ஆரம்பத்திலேயே அதை உணவுகளின் மூலமாக குணப்படுத்திக் கொண்டால் அது பெரிய பிரச்சினை இல்லை. அதுவே தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் மறதி தீவிர வியாதியாகி பல பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும். இதை கண்டிப்பாக நம்மால் சரி செய்ய முடியும். நம் ஞாபக சக்தியை அதிகரிக்க பச்சை காய்கறிகள், பழ வகைகள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


கீரைகளை பச்சையாக வாங்கி சமைத்து சாப்பிடுவது நல்லது. அதை விட்டு விட்டு கீரை பொடிகளை கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துவது முழு பலனை அளிக்காது. வல்லாரை கீரை போன்ற கீரை வகைகளை வாரம் இரு முறையேனும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் மற்றும் ஓய்வு கிடைக்கிறதா என்பதை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. எதை செய்தாலும் ஆர்வத்தோடு செய்து பாருங்கள். கண்டிப்பாக அந்த விஷயத்தை நீங்கள் நன்றாக செய்து முடிப்பீர்கள். 

Tags:    

Similar News