கோரிக்கைகளுடன் பாரத பிரதமரை சந்திக்க போகும் தமிழக முதல்வர்!

Update: 2021-06-16 14:45 GMT

நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 30 அம்ச கோரிக்கைகளை அவர் கோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றார். இதனையடுத்து முதலமைச்சராக பதிவியேற்ற பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நாளை பிரதமரை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பில் மத்திய அரசின் தொடர்புடைய விஷயங்கள் குறித்து நாளைய சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது. மரியாதை நிமிர்த்தமாக நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடு என 30 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் கலந்தாய்வு செய்து கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

நாளை காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். பின்னர் மாலை 5மணியளவில் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் வழங்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக, திமுக கட்சி அலுவலகமான அறிவாலயம் கட்டிட பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுவார் என்று தெரிகிறது.

Similar News