அமைச்சருக்காக இளநீர் தூக்கி நிற்கும் முதன்மை கல்வி அலுவலர் - அரசு அதிகாரிகளை மதிக்காத தி.மு.க?
அமைச்சர்கள் வருகை புரிந்தால் அரசு அதிகாரிகள் மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் தி.மு.க ஆட்சியில் அமைச்சருக்காக் பள்ளி கல்வித்துறை அதிகாரி இளநீர் தூக்கி நின்ற சம்பவம் சமத்துவம் பேசும் தி.மு.க ஆட்சியில் நடந்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு பணிக்காக சென்றுள்ளார். ஆய்வு பணிக்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் இளநீரை ஏந்திய படி நீண்ட நேரமாக பரிதாபத்திற்குரிய வகையில் நின்றிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலதரப்பினரும் கன்டனம் தெரிவித்து வருகின்றனர்.