பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து ஊடுருவி கோவைக்கு வந்து விபச்சாரம்? அதிர்ச்சி தகவல்!

Update: 2021-06-18 01:45 GMT

பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து வந்து கோவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை சரவணம்பட்டி மகாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த அஜித்மோன், மகந்த்ஷா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அங்கு வங்கதேசத்தை சேர்ந்த 20 வயது அழகி உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். இதில், வங்கசேத்தை சேர்ந்த பெண் பாஸ்போர்ட் இல்லாமல் மேற்கு வங்கம் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : தினத்தந்தி

Similar News