உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக, பிரதமர் அறிமுகம் செய்துவைத்த புதிய யோகா ஆப்.!

Update: 2021-06-21 12:37 GMT

உலகம் தொடர்ந்து இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் மோடி யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து புதிய 'mYoga'' எனும் பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளார். இது உலகம் முழுவதும் மக்களுக்கு யோகா பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையில் பிரதமர் மோடி இந்த கருத்தை முன்மொழிந்ததிலிருந்து வருடாவருடம் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் ஆக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் உலகெங்கும் ஏழாவது யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 


யோகாவின் சிறப்புகளை எடுத்துரைத்த கையோடு அதை பலரும் அறிய புதிய தளமாக இருக்கும் வகையில் ஒரு புதிய ஆப் ஒன்றையும் பிரதமர் மோடி அவர்கள் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளார். இந்த புதிய mYoga ஆப், இந்தியா உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதிய தளமாகும். புதிய mYoga ஆப் 'ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்' (One world, one health) என்ற கருத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. mYoga பயன்பாடு, பெயர் குறிப்பிடுவதுபோல் இது ஒரு மொபைல் அடிப்படையிலான பயன்பாடாகும். 


பயன்பாட்டில் பொதுவான யோகா நெறிமுறையின் அடிப்படையில் யோகா பயிற்சிக்கான பல வீடியோக்கள் இருக்கும். மேலும், mYoga பயன்பாடு பல சர்வதேச மொழிகளிலும் கிடைக்கிறது, இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாகவும் இருக்கும். கூடுதலாக, mYoga பயன்பாட்டில் தொடக்க, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகள் போன்ற அனைத்து பிரிவினருக்குமான பல பிரிவுகள் இருக்கும். MYoga பயன்பாட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் இப்போதே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

Similar News