தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால் கட்டாயம் இந்த தண்டனையாம் : பிலிப்பைன்ஸ் பிரதமர் எச்சரிக்கை!

Update: 2021-06-22 13:33 GMT

உலகளவில் தற்பொழுது கொரோனா தொற்றுநோய் பரவி பல்வேறு மக்களின் வாழ்க்கையில் மிகவும் பாதித்துள்ளது என்று சொல்லலாம். மேலும் இந்த தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக நாட்டில் உள்ள மக்களை இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை உலக நாடுகள் உள்ளன. இந்த செயல்தான் நோயை கட்டுப்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 


எனவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே நோக்கமாக உலக நாடுகள் எடுத்துள்ளன. அந்த வகையில் பல்வேறு நாட்டிலுள்ள மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர். இருந்தாலும் சில நாடுகளில் மக்கள் தடுப்பூசி மீதான நம்பிக்கை இல்லாத சில காரணங்களுக்காக நிராகரித்து வருகின்றனர். அந்த நாடுகளில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசியைப் போட மறுப்போருக்கு கட்டாயம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவான மக்களே ஆர்வம் காட்டியுள்ளனர். இதையடுத்து அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 2.1 மில்லியன் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. கொரோனா தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Similar News