மாவோயிஸ்டுகளுக்கு கொரோனா தொற்று பீதி - இயக்கத்தில் இருந்து வெளியேறுதாக தகவல்!
இந்தியாவில் மாவோயிஸ்டுகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதாகவும் அதனால் பல மாவோயிஸ்டுகள் இறந்துவிட்டதாகவும் இதன் காரணமாக அந்த இயக்கத்திலிருந்து பலர் வெளியேறி வருவதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மாவோயிஸ்ட் அதிகமாக இருக்கும் பகுதி ரெட் காரிடார் என்றும் அழைக்கப்படுகிறது. மாவோயிஸ்டுகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அடர்ந்த காடுகளில் வசித்துவரும் இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற காற்றின் மூலம் பரவும் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 8 மாவோயிஸ்ட் தலைவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரியான சுனில் தத் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். சுமார் 15-20 மாவோயிஸ்டுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாகவும் அதனால் பல உள்நாட்டு பயங்கரவாதிகள் கொடிய வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்ற பயத்தில் தங்கள் குழுவை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட் போராளிகளை சந்தித்தல் மற்றும் பிற காரணங்களால் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு கிளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடர்ந்த காடுகளில் வாழும் மாவோயிஸ்டுகள் பாம்பு கடித்தல், காலாவதியான உணவை உட்கொள்ளுதல் மற்றும் மிகக் குறைவான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றால் அதிகம் உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Source : Opindia