அம்மன் கோவில் எதிரே இறைச்சி கடை - இந்து முன்னணி முயற்சியால் மூடப்பட்டது!

Update: 2021-06-27 06:13 GMT

ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் எதிரே செயல்பட்டு வந்த இறைச்சி கடையை இந்து முன்னணியினரின் தொடர்ச்சியான எதிர்ப்பின் வாயிலாக மூட செய்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலையில் அமைந்துள்ள அம்மன் கோவிலான மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பொழுது அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது இம்மயானத்தில் பராசக்தியின் வடிவாய் மாசணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்ணைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார் என்ற சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது.

இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு எதிரே இறைச்சிக்கடை அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது இந்து முன்னணியினர் இந்த இறைச்சி கடையை உடனடியாக மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோவில் முன்பு செயல்பட்டு வந்த இறைச்சி கடை மூடப்பட்டது. இது தொடர்பாக இந்து முன்னணி சார்பாக செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினரின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாக மாசாணி அம்மன் கோவில் முன்பு செயல்பட்டு வந்த இறைச்சிக்கடை மூடப்பட்டுள்ளது அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வழிபாட்டு தலங்களின் அருகில் இறைச்சிக் கடை அமைப்பதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News