கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகராவில் கட்சியின் பெண் உறுப்பினரை கட்சியை சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது ஆளும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் பாபுராஜ் மற்றும் லிஜிஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இருவரும் தன்னை மிகவும் மோசமாக துன்புறுத்தினார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் முதலில் வடகரா கட்சி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். ஆனால் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் முயற்சியால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணியும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியதும் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.
Rape of party worker: 2 CPI(M) leaders arrested in Keralahttps://t.co/GoIJdwSpnO pic.twitter.com/Xq86dbcqfQ
— Hindustan Times (@htTweets) June 28, 2021
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பரிசோதனை செய்து பிறகு காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் கொடுத்த அழுத்தத்தினால் தான் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது.
Source : Swarajya