இதை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுமாம்!

Update: 2021-06-29 00:15 GMT

பொதுவாக நகரங்களில் மாடித்தோட்டங்களிலும் அதிகம் பயிர் செய்யபடும் கீரை தான் சிறு கீரை. சுமாராக 20 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இந்த சிறுகீரையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் இதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக கிடைக்கின்றது. அவற்றைப் பற்றி பார்ப்போம். சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. சிறுகீரை செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க வல்லது.


இந்த கீரைகளில் இரும்புச்சத்து, நீர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின்கள் A மற்றும் C ஆகியவையும் அடங்கியுள்ளது. திணை அரிசி சாதத்துடன் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை சேர்த்து சமைத்து, சிறுகீரை பொரியலோடு சேர்த்து மதிய வேளையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சினையைக் குணப்படுத்தலாம். சிறுகீரை மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்த வல்லது. சிறுகீரை இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.


இரத்த சோகை பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக சிறுகீரை சாப்பிட வேண்டும். சிறுகீரையுடன் சிறிது பச்சை மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து சிரங்கு, சொரி, அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நோய்கள் இருக்கும் பகுதிகளில் தேய்த்து வர அந்நோய்கள் குணமாகும். இரத்தக் காயங்கள் ஏற்பட்டால் கிருமிகள் பரவாமல் தடுக்கவும், காயங்களை விரைவாக ஆற்றவும் சிறுகீரையை அவ்விடத்தில் வைத்து கட்டலாம். வைட்டமின் A சத்து சிறுகீரையில் அதிகம் உள்ளது, இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பொதுவாக எந்த கீரை ஆகினும் இரவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Similar News