தமிழக புதிய டி.ஜி.பி யார்? டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை!

Update: 2021-06-29 02:00 GMT

புதிய டி.ஜி.பி.யைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைவரான டி.ஜி.பி. திரிபாதியின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து புதிய டி.ஜி.பி.யைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.

இதன்படி 3 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து, அதனை மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு தேர்வு செய்யும். இதற்கான அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News