சுவிட்சர்லாந்து : டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு!
உலகமெங்கும் தற்பொழுது சில நாடுகளில் உருமாறிய அல்லது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அத்தகைய நாடுகள் மீது பல கட்டுப்பாடுகள் விதித்து இருந்தன. குறிப்பாக உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ்கள் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் இருந்த மக்கள் பயணம் செய்வதற்கு பல நாடுகள் தடை விதித்து இருக்கிறது.
ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களின் வருகைக்கு சுவிட்சர்லாந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய வகைகளை கொண்ட இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழு அளவிலான கொரோனா தடுப்பூசி போட்டவர்களாகவோ அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களாகவோ இருப்பவர்கள் வருவதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
இதன்படி, அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வருவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, நாட்டுக்குள் வந்தவுடன் தனிமைப் படுத்துதலுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என அறிவித்து உள்ளது. மேலும் இதன் மூலமாக பல்வேறு மக்கள் தங்களுடைய வேலைக்காகவும் மற்றும் படிப்பிற்காகவும் சுவிட்சர்லாந்து செல்பவர்கள் இனி தங்களுடைய பயணத்தை தொடங்கலாம்.