ஜெய் ஸ்ரீராம் : ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்ட சிலையுடன் கோவில் எழுப்பிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.
இந்து சனாதன தர்மத்தின் மீது அசாத்திய பற்று கொண்டவர் நடிகர் அர்ஜுன். இதனையடுத்து நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டம் ஒன்று கெருகம்பாக்கத்தில் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தார் நடிகர் அர்ஜுன்.
இதனைதொடர்ந்து பின் இந்த சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்து ஆகம விதிகளின்படி கோவிலை திறந்துள்ளார் நடிகர் அர்ஜுன். இந்த மகத்துவமான செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.