உலகில் உள்ள பல நாடுகள் இந்த கொரோனாவால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக சுற்றுலா துறை பாதிக்கப்பட்டதை அடுத்து, இது உலக பொருளாதாரத்தில் சுமார் 300 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா சபை தற்பொழுது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உலக சுற்றுலா அமைப்பு ஆகியவை இணைந்து இது குறித்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். கொரோனா காரணமாகவே, சுற்றுலா துறை மற்றும் அதை சார்ந்த தொழில்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தில் 300 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டில் மட்டுமே 180 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. லட்சக்கணக்கானோருக்கான வாழ்வாதாரமாக சுற்றுலா துறை இப்பொழுதும் உள்ளது. பல நாடுகள் குறிப்பாக, வளரும் நாடுகள் சுற்றுலாவை நம்பியே உள்ளன. தடுப்பூசி போடுவதன் மூலம் சுற்றுலாவை மீட்டெடுக்க முடியும். வேலை வாய்ப்புகளையும் வழங்க இயலும். ஆனால், தடுப்பூசி போடும் விகிதம் ஆனது நாட்டுக்கு நாடு மிகவும் வித்தியாசப்படுகிறது.
இதனால் உலகளவில் இத்துறையானது 2023ம் ஆண்டுக்கு முன்னதாக கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட வாய்ப்பில்லை.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வளர்கின்ற நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நிச்சயம் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பு வைத்து இயக்க வேண்டும் என்று ஒரு சூழ்நிலையில் தற்போது இருந்து வருகிறது.