நம் நாட்டில் ஏராளமான மூலிகைத் தாவரங்கள் இருக்கின்றன. நாம் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மூலிகை தான் தூதுவளை. தூதுவளை எனும் மூலிகை தாவரம் பொதுவாக வேலிகளில் படர்ந்து வளரும். இந்த மூலிகை நம் முன்னோர்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமல் போன்ற சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் உடல் வலிமை பெறவும் உதவும் இந்த அற்புதமான மூலிகைப் பற்றி உதவுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
கால்சியம் சத்துக்கள் நிறைந்தது இந்த தூதுவளை. வாரத்திற்கு ஒரு இருமுறையேனும் தூதுவளையை துவையலாக செய்து உணவுடன் சேர்த்துக்கொண்டால் பற்களும் எலும்புகளும் பலப்படும். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாக தூதுவளை கஷாயம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி இந்த கசாயத்தைக் குடிப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை குணமடையும்.
தூதுவளை இலையை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமை பெறும். இதே போல இதன் பூவை உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்தாலும் உடல் அசுர பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுபவர்கள் தூதுவளை இலை தூளைத் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.