ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமான பங்கு இந்த இலைகளுக்கும் உண்டு!

Update: 2021-07-09 00:30 GMT

ஆயுர்வேத மருத்துவத்தில் எலுமிச்சை வகைககள் மிக முக்கிய பங்குவகிக்கின்றன. அதிலும் குறிப்பாக நார்த்தை பல அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக நார்த்தங்காய் அல்லது நார்த்தம்பழம் தான் மருத்துவ குணம் வாய்ந்தது என்று கேள்விப் பட்டிருப்போம். ஆனால் நார்த்தம் இலையிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது எலுமிச்சை இனத்தைச் சேர்ந்தது என்பதால் இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், வைட்டமின் C சத்துக்களும் இதில் ஏராளமாகக் காணப்படுகிறது. 


நார்த்தங்காய் கூட இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களால் தவிர்க்கப்பட அறிவுறுத்தப்படுகிறது. நார்த்தை இலையிலிருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ, உடல் வெப்பம் அதிகம் ஆவதால் ஏற்படும் பித்தம், கீல்வாதம் போன்ற பிரச்சினைகளை நார்த்தை இலைப்பொடி குணப்படுத்த வல்லது. அதிகமாக சாப்பிடுவதால் அல்லது சாப்பிட்ட உணவினால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை போக்கும். வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இந்த நார்த்தை இலைத்தூள் சிறந்த மருந்து.


நார்த்தை இலையில் இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், அயோடின் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள எல்லோருக்கும் இது ஒரு சிறந்த மாமருந்து. மூளையின் செயல்பாட்டைத் தூண்டும் செலினியம் இந்த நார்த்தையில் அதிகம் இருப்பதால் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும். நார்த்தை நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்க வல்லது. அஜீரணக்கோளாறு காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளை குணப்படுத்த வல்லது.

Similar News