தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இவற்றிலிருந்து விலக்கு : பிரிட்டன் அரசின் அறிவிப்பு!
உலக அளவில் பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ரஷ்யா பிரிட்டன் போன்ற நாடுகள் இருந்து வந்தன. தற்போது ரஷ்யாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அங்கு வரும் 19ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆனால் தற்போது பிரிட்டனில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன குறிப்பாக தனிமைப்படுத்துதல் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் இருந்தன. ஆனால் இதிலிருந்து தற்போது விலக்கு அளிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது சுற்றுலாப்பயணிகளுக்கு இடையில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தியாகும்.
இந்நிலையில், பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று கூறுகையில், "15 மாதங்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. கொரோனா தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டு உள்ளோம்" என்று அவர் கூறினார்.