அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி அன்றிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆம், உயிர் காக்கும் அமிர்தமே ஆனாலும் அதை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அதுவே நமக்கு நஞ்சு ஆகிவிடும். எனவே அளவுக்கு மீறி சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினையெல்லாம் ஏற்படுகிறது. அதனால் நமக்கு பின்பு ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
எப்பொழுதாவது அதிகமாக சாப்பிட்டால் சாதாரண ஜீரண கோளாறு மட்டுமே ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தொடர்ந்து அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளும்போது செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். இதனால் தூக்க முறை பாதிக்கப்படும். படுத்தால் நெஞ்சுக்கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாது.
அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது அதிக உடல் எடை உண்டாக வாய்ப்பாகும். இதனால் அதிகமாக உணவை எடுத்துக்கொண்டு உடல் எடைக் கூடும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை நினைவாற்றல் சீர்குலையும். அது மட்டுமில்லாமல் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஹார்மோனின் உற்பத்தி தடைபடும். இதனால் பல்வேறு பின்விளைவுகள் குறிப்பாக ஞாபக சக்தி குறைவு, மந்தமான செயல்பாடு, அன்றாட வேலைகளில் சோம்பேறித்தனம் போன்ற பல்வேறு விஷயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.