பைட்டோ தெரபி என்பது இயற்கையான முறையில் இயற்கை மூலிகைகள் மற்றும் அவற்றின் சாறுகளை கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் எடை இழக்கச் செய்யும் சிகிச்சை முறையாகும். இது அலோபதி மருத்துவ முறையில் பல வருடங்களாக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இந்த காலகட்டத்தில் மாறுபட்ட உணவு முறைகளாலும் உட்கார்ந்தே வேலை செய்யும் பணி சூழலாலும் பலரும் அதிக எடைபிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் இதய குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளால் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் செயல்முறைக்கு தான் பைட்டோ தெரபி என்று பெயர். எனவே ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் காபி தூள், டீ தூள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தாமல் இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி விதைகள், சீரகம், வெந்தயம், சுக்கு போன்றவற்றில் தேநீர் தயார் செய்து குடிக்கலாம். செவ்வந்தி, அஸ்வகந்தா அல்லது லாவெண்டர் தேநீர் அல்லது இயற்கையான எண்ணெய் வகைகளை பயன்படுத்துதவதால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற மன அழுத்த எதிர்ப்பு ஹார்மோன்களை அதிகரிப்பதற்கும், இரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் மூலிகை டீக்களை குடிக்கலாம்.
ஒருவரின் உடல் நச்சுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக இருக்க மஞ்சள், பெருஞ்சீரகம், சியா விதைகள் மற்றும் சீரகம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை ரத்த சுத்திகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள் ஆகும். சேதப்படுத்தும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம், உடல் சிறப்பாக செயல்படுகிறது மற்றும் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும். இதே போல இயற்கை முறையில் விளைவிக்கப்படும் அரிசி, பழங்கள், கீரைகள் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்.