இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் பிறந்தநாளை சிறப்பித்த கூகுள்!

Update: 2021-07-18 11:23 GMT

இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவரின் 160ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல்(doodle) வைத்து சிறப்பித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான கடம்பினி கங்குலியின் புகைப்படத்தை கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வைத்து சிறப்பித்துள்ளது. கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முக்கிய கட்டடத்தின் பின்னணியில் கங்குலியின் உருவப்படத்தை காண்பிப்பது போல் ஒரு புகைப்படத்தை வைத்துள்ளது. இதனை பெங்களூரைச் சேர்ந்த ஒட்ரிஜா என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார்.

கங்குலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். ஜோஷி அமெரிக்காவின் பென்சில்வேனியா பெண்கள் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, ​​கங்குலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) மேற்கத்திய மருத்துவத்தைப் படித்தார்.

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்குலியைத் திருமணம் செய்து கொண்டார்.. அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி கடம்பினி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற கடம்பனியை இன்று கூகுள் சிறப்பித்துள்ளது.

Similar News