கபாலீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த பள்ளி- மீட்க அறநிலையத் துறைக்கு கோரிக்கை!

Update: 2021-07-23 09:17 GMT

சென்னை கபாலீஸ்வரா் கோவில் நிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை உடனடியாக மீட்டு அதற்கு வாடகை வசூல் செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதேபோல் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்டு வாடகை வசூலிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களில் கோவிலுக்கு சொந்தமாக 22 கிரவுண்டு பரப்பிலான கட்டிடங்கள், நூலகம் ஆகியன உள்ளன. இதனை அனைத்து பொதுமக்களும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

கோவில் குளத்தில் எந்த காலகட்டத்திலும் நீா் வற்றாமல் தேங்கி நிற்க தேவையான மண் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும், மண் மாதிரி பரிசோதனை செய்து அறிக்கையின் முடிவின் அடிப்படையில் தேவைப்படும் புதிய களிமண் கொண்டு குளத்தில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபாலீஸ்வரா் கோவிலுக்கு சொந்தமான சுமார் 46 கிரவுண்ட் பரப்பளவு நிலத்தை விளையாட்டு மைதானமாக பி.எஸ்.உயா்நிலை பள்ளி பயன்படுத்தி வருகிறது.இந்த இடத்தை மீட்டு உடனடியாக அந்த பள்ளியில் இருந்து வாடகை வசூல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News