கர்நாடக முதல்வராக மீண்டும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரே தேர்வு : ஏமாற்றத்தில் காங்கிரஸ்!

Update: 2021-07-27 15:52 GMT

கர்நாடக முதல்வராக பா.ஜ.க சார்பில் எடியூரப்பா பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்தார். புதிய கர்நாடக முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு கர்நாடக மக்களிடையே அதிக அளவில் இருந்தது.

கர்நாடகத்தில் லிங்காயத்து சமூகத்தின் அதீத ஆதரவை கொண்ட கட்சி பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பாவும் இதே சமூகத்தை சேர்ந்தவர் தான். கர்நாடக முதல்வராக எடியூரப்பா தொடர வேண்டும் என்று லிங்காயத்து சமூகத்தை சார்ந்த மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து அதற்கான கோரிக்கையும் வைத்தனர். இந்த நிலையில், எடியூரப்பா ராஜினாமா செய்தால், லிங்காயத்து மக்களின் ஆதரவை பா.ஜ.க இழக்க நேரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது.

அதே போல், எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் பா.ஜ.க-வை பெரிய கட்சியாக உருவாக்கியதில் மிக பெரிய பங்கு எடியூரப்பாவுக்கு தான் உண்டு. இந்த நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பேசுகையில், "அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க-வை வெற்ற பெற செய்வதில் அயராது உழைப்பேன். அடுத்த முதல்வராக யார் வந்தாலும் அவருக்கு முழு ஆதரவை தருவேன்", என்று கூறியிருந்தார்.


கர்நாடக முதல்வராக லிங்காயத்து அல்லாத ஒருவரை பா.ஜ.க மேலிடம் தேர்வு செய்யும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது போல் தெரிகிறது. இனி லிங்காயத்து மக்கள் பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என காங்கிரஸ் கணக்கு போட்டிருக்க கூடும். இதையெல்லாம் உடைத்து, பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிக்கும் மக்களை மேலும் உற்சாகப்படுத்தி பசவராஜ் பொம்மை அவர்களை கர்நாடக முதல்வராக அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஏமாற்றத்தை தந்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் தான் இந்த பசவராஜ் பொம்மை என்பது மேலும் சுவாரிஸ்யமான தகவல். 

Similar News