கற்பழித்த பாதிரியாரைத் திருமணம் செய்ய அனுமதி கேட்கும் பெண்- பின்னணி என்ன?
The rape victim has accepted to marry the priest
கேரளாவில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே பாதிரியாரை திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
2019 பிப்ரவரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கருவுற்றதை தொடர்ந்து கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ராபினை உடனடியாக சர்ச் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய பின்னர் அவர் 2020ஆம் ஆண்டு சர்ச் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர். கத்தோலிக்க பாதிரியார் ராபின் பணிபுரிந்த சர்ச்சில் டேட்டா என்ட்ரி வேலைக்காக 2016 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அந்தப் பெண் சேர்ந்துள்ளார். ஒருநாள் யாரும் இல்ல சமயம் பார்த்து பாதிரியார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்டிய பிறகு அவர் அவளை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளார்.
சிறுமி தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மாலை நேரத்தில் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். எனினும் பாதிரியாருக்கு பயந்து எந்த விவரத்தையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
பிப்ரவரி 7, 2017 அன்று, சிறுமியின் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கண்ணூரில் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மருத்துவமனையில் அவர் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.