வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்த உதவும் உணவுகள் வகைகள் !
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் உணவுகள்.
மனிதன் தன் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய உடலில் ஏதேனும் ஒரு புது புது விதமான மாற்றத்தை எதிர் கொண்டு தான் இருக்கிறான். அதற்கு வளர்சிதைமாற்றம் என்று பெயர். குழந்தையாக பிறந்ததில் இருந்து, இளைஞனாக மாறும் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விதமான நிகழ்வுகளை கடந்த பிறகும் ஒரு ஆரோக்கியமான மனிதனாக இருக்கிறான். ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு சில விஷயங்கள் இன்றியமையாததாக இருக்கிறது. உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகள் உள்ளன. விரைவாக உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுகளைப் பார்ப்போம்.
மீன்களை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை கொழுப்பு எரிக்க உதவுகின்றன மற்றும் வளர்சிதை மாற்றத்தை கணிசமாக மேம்படுத்துகின்றன. தேநீரில் உள்ள காஃபின் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. கிரீன் டீ கலோரிகளை எரிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
பருப்பு இரும்புச்சத்து நிறைந்தவை. அவை உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் இருந்து புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது. புரதங்கள் அவற்றை ஜீரணிக்க அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அவை உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். மிளகுத்தூள் ஆற்றல் மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரி எரியும் விகிதத்தை மேம்படுத்துகின்றன.
Image courtesy: wikipedia