இலங்கை: கொரோனா அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை !

இலங்கையில் அதிகரிக்கும் போது பற்று காரணமாக இந்தியாவிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய உள்ளது.

Update: 2021-08-16 00:15 GMT

தற்பொழுது இலங்கையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் வருகின்ற அக்டோபர் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. உலக நாடுகள் முகம் எச்சரிக்கை இருக்க வேண்டும் என்றும் WHO கேட்டுக் கொண்டது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் தற்பொழுது கொரோனா அதிகமாகவே இருந்து வருகிறது. 


இதுகுறித்து இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகையில், இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட உயர்வைவிட பாதி அளவில்தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் இதே நிலை நீடித்தால் தினசரி பாதிப்பு வரும் செப்., மத்தியில் 6,000 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளோம்.


கொரோனா பாதிப்பால் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 528ஆக இருந்தது, இதே நிலை நீடித்தால், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Input:  https://www.newindianexpress.com/world/2021/aug/06/sri-lanka-decides-against-enforcing-nationwide-lockdown-amid-surging-covid-cases-2341138.html

Image courtesy: indian express 


Tags:    

Similar News