விநாயகர் சதுர்த்தி தடைக்கு எதிராக போராட்டம் - கொந்தளிக்கும் இந்து முன்னணி!
விநாயகர் சதுர்த்தி தடைக்கு எதிராக சென்னையில் வருகின்ற 6 தேதி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்தகு தடை விதிக்கப்படுள்ளது. இதற்க்கு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.
அப்படி மத்திய அரசு கூறும் அனைத்தையும் மாநில அரசு ஏற்கொள்வது என்றால் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் மதுமான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மதங்களின் பண்டிகைக்கு அனுமதி அளித்ததோடு அரசு ஊழியர்களும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அப்படி இருக்கையில் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை என்பது ஒருதலை பட்சமானது என தெரிவித்தார். இதனை எதிர்த்து வருகின்ற 6-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையதுறை சார்பில் வெளியிடப்படும் திட்டங்கள் விளம்பர நோக்கில் மட்டுமே வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.