தமிழிசைக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து ! - விளம்பரத்திற்காக வழக்கு என நீதிமன்றம் கருத்து !

வி.சி.க தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து நீதி மன்றம் தீர்ப்பு

Update: 2021-09-28 18:00 GMT

 தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த போது விடுதலை கட்சி தலைவர் திருமாவளவனை விமர்ச்சித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தாடி கார்த்திகேயன் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராக கூறி தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. இதனை எதிர்த்து தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2017 முதல் நடந்து வந்தாலும் இரு தரப்பினரும் முறையாக ஆஜராகவில்லை. இந்நிலையில், இதனை அடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொர்பான தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது, இந்திய அரசியல் சாசனம் அனைவருக்கும் கருத்துரிமை வழங்கியுள்ளதை சுட்டிகாட்டினார்.

அது மட்டுமின்றி இந்த வழக்கு திருமாவளவனின் அங்கீகாரம் பெற்று தொடரப்பட்டது இல்லை எனவும் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு எனவும் கூறி இதனை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டடுள்ளது.

Source: Puthiyathalaimurai

Tags:    

Similar News