திருமலையில் வழிபாட்டு நடைமுறைகள் முறையாக நடைபெறுகிறதா ? கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் !

திருப்பதி வழிப்பாட்டு நடைமுறைகள் குறித்து தேவஸ்தான்த்தின் விளக்கம் கேட்டுள்ளது உச்சநீதி மன்றம்

Update: 2021-10-01 09:54 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் தினம் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர். இந்நிலையில், இந்த கோவிலில் அபிஷேக சேவை, தோமாலை சேவை, அர்ஜிதா பிரமோத்சவம், யோகாந்தா உற்சவம், மஹா லாகு தர்ஷன் போன்ற சேவைகள் சரிவர நடைபெறவில்லை எனவும் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீவாரி தாதா என்பவர் சார்பில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் "கோவில் வழிப்பாடுகளை நடைமுறைபடுத்துவது தேவஸ்தானத்தின் பணி. அதலால் அது பிறருடைய சமூக உரிமைகளுகளை பாதிக்காதவரை அதனை கேள்வி கேட்க முடியாது" என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் மத வழிபாட்டு விவகாரங்களில் தலையீடலாமா  என தயங்கிய நீதிமன்றம் பின்னர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்  கொண்டது.

அப்போது மனுதாரரிடம் பேசிய நீதிபதிகள், பெருமாளுக்கான பூஜைகள் பாரம்பரிய முறைபடி நடைபெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என தெரிவித்தார். மேலும், இது குறித்து தேவஸ்தானம் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Source: Dinamani

Tags:    

Similar News