பிரதமரை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் எல். முருகன் !

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார்;

Update: 2021-10-04 17:45 GMT
பிரதமரை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் எல். முருகன் !

மத்திய இணையமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தன்னை மாநிலங்கலவை உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர்  நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

அப்போது அவர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் ஒன்றையும் வழங்கினார். தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல். முருகன் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தை பிரதிபலிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Source:Puthiyathalaimurai

Tags:    

Similar News