ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வரும் அதிரடி திட்டம் !

Update: 2021-10-06 02:23 GMT

திருப்பதி தேவஸ்தானம்,  ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் முழுதும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பகதர்களுக்கு திருமலையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்  என கூறியுள்ளது.

இந்து தர்மத்தை மக்களிடையே பரப்பும் நோக்கிலும், மாநிலத்தில் நடைபெறும் மதமாற்றம் போன்ற செயல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

திருமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களை அழைத்து வருவதற்கா 30 பேருந்துகள் இயக்கப்படும் என தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 7 முதல் 14 வரை ஒரு நாளைக்கு 1,000 பக்தர்கள் இந்த முறையில் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து உள்ளூர் நன்கொடையாளர்கள் மூலம் நன்கொடை பெற்று பக்தர்களுக்கு உணவு போன்ற அடிப்படை விஷயங்கள் இலவசமாக செய்து தரப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் கோவிட் நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே திருமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Source: Indian Express

Tags:    

Similar News