கோவிலில் கொள்ளை நடந்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்குமா ?

Update: 2021-10-10 06:59 GMT

தர்மபுரி மாவட்டம், அன்னாசாகரம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 2014 ஆண்டு கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவிலில் கடந்த அக்டோபர் 7 தேதி நகைகள் கொள்ளை போனது,

இச்சம்பவம் காலை நடந்துள்ளது ஆனால் பிற்பகல் 3:30 மணி வரை புகார்  அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த கொள்ளை சம்பம் குறித்து அதிகாரிகள் புகார் அளிக்காது என தெரியவில்லை. இந்த கோவிலில் உள்ள நகைகளை முறையாக கணக்கெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

Twitter

Tags:    

Similar News