திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தளரும் கட்டுப்பாடுகள் - விரைவில் வரவிருக்கும் அறிவிப்பு !

Update: 2021-11-15 10:15 GMT

திருமலைக்கு வரும் பக்தர்களின் அனுமதி எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் 2, 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களே திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே திருப்பதியில் தரின அனுமதி கிடைத்தது.

இந்நிலையில் பக்தர்களின் அனுமதி எண்ணிக்கை உயர்த்துவது தொடர்பாக இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது, "தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும். மாநிலத்தில் கொரோனா குறைந்தாலும் சித்தூர் மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதற்கான காரணத்தை தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிகையை வைத்து விரைவில் ஏழுமலையானுக்கு நடக்கும் சுப்பரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்" என கூறினார்.


Source - Maalai malar

Tags:    

Similar News