தீவிரவாதம் காரணமாக தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது சவுதி அரேபிய அரசு.
இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவுதி அரேபிய அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தீவிரவாதங்களுக்கான வாசல்களில் ஒன்றாக தப்லீக் ஜமாத் அமைப்பு இருப்பதால் அதனை தடை செய்வதாக அறிவித்துள்ளது சவுதி அரேபிய அரசு.
தப்லீக் ஜமாத் உலகின் பல இடங்களில் இயங்க சவுதி அரேபியாவில் இருந்தே நிதி உதவி அதிகளவில் கிடைத்து வந்தது, இந்நிலையில் இந்த தடை காரணமாக நிதி உதவி கிடைக்காமல் தப்லீக் ஜமாத் அமைப்பின் செயல்பாடுகள் விரைவில் முடங்க கூடலாம் என தெரிகிறது.
மேலும் சவுதி அரேபியா தடை விதித்ததை தொடர்ந்து இன்னும் பல நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.