எதுவுமே மாற்ற முடியவில்லை: புலம்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்!

Update: 2022-02-12 12:54 GMT

பாகிஸ்தானில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த உறுதிமொழிப்படி நாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முடியவில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அரசு நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி புலம்பியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு பேசுகையில்; ஆட்சிக்கு வருவதற்கு புதிதில் பல்வேறு புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக பல மாற்றங்களை நிகழ்த்தலாம் என நினைத்தேன். ஆனால் ஆட்சி நடைபெற்ற நிலையில் பல அதிர்ச்சியை தாங்கும் திறன் எங்கள் அரசுக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன.

மேலும், அரசு மற்றும் அமைச்சகங்களும் எதிர்பார்த்த எந்த ஒரு பலனையும் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அரசுக்கும், நாட்டின் நலனுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அது மட்டுமின்றி ஏற்றுமதி மூலமாக வறுமையை ஒழிக்கவும் பாடுபட்டு வருகிறோம். அமைப்பில் உள்ள கோளாறால் ஆட்சிக்கு வருவதற்கு முனுனர் அளித்த வாக்குறுதிப்படி நாட்டில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு பாகிஸ்தான் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமராக மக்களுக்கு எதாவது செய்வார் என்றால் இப்படி கையை விரித்தால் அப்பாவி மக்களின் நிலைமை என்னாவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News