மத்திய அமைச்சர் முருகனின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

Update: 2022-02-19 10:12 GMT
மத்திய அமைச்சர் முருகனின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தி.மு.க வாக்குக்கு பணம் கொடுப்பதாகவும் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், "அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க-வினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம்! ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு திரு முருகன், மத்திய அமைச்சரின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?" என்று சாடியுள்ளார் அண்ணாமலை. 

Tags:    

Similar News