உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் வெடித்த மக்கள் போராட்டம்!

Update: 2022-02-25 05:43 GMT

உலக நாடுகளை புறந்தள்ளிவிட்டு உக்ரைன் கைப்பற்றும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளது. இதனால் உக்ரைனில் கடந்த இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் ராக்கெட்டுகளை வீசி வருவதால் உக்ரைன் ராணுவத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் சேர்த்து 130க்கும் அதிகமானோர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, லண்டன், உள்ளிட்ட நாடுகள் அதிபர் புடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் அதனை புறந்தள்ளிய ரஷ்ய அதிபர் போரை ஆக்ரோஷமான முறையில் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்யாவில் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் புடினுக்கு உள்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Global Citizen

Tags:    

Similar News