பிரதமர் மோடியின் போன் கால்! உக்ரைனிலுள்ள இந்தியர்கள் பாதுகாக்கப்படுவதாக புடின் தகவல்!

Update: 2022-02-25 09:04 GMT

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் நேற்று இரவு தொலைபேசி வாயிலாக உக்ரைன் விவகாரம் பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்குள்ள இந்தியர்களின் நிலைமை பற்றி எடுத்துரைத்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் வெளியேறி வந்தனர். சிலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அதே போன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியாகியது. இதனால் இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பிரதமர் மோடி நேற்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். இந்தியர்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் அனைத்து உதவிகளையும் ரஷ்யா செய்ய வேண்டும் என்ற கோரிக்யை முன்வைத்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் புதிய தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அதாவது உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம். மாணவர்களின் நிலைமை பற்றியும் கண்காணித்து வருகின்றோம். எவ்வித கவலையும் அடைய வேண்டாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஒரு தொலைபேசி அழைப்பில் அனைவரின் பாதுகாப்பும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News