எங்களுக்கு ஆதரவளியுங்கள்: பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்!

ரஷ்யா நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

Update: 2022-02-26 13:52 GMT

ரஷ்யா நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

கடந்த மூன்றாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் வசித்து வரும் இந்தியர் உட்பட பல வெளிநாட்டினர்களின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி மூலமாக பேசினார். இதனை தொடர்ந்து அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று புடின் உறுதி அளித்தார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது பற்றியும், ஒரு லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் அத்துமீறி எங்களின் நாட்டுக்குள் நுழைந்தது பற்றியும் கூறியுள்ளார். மேலும், அரசியல் ரீதியாக இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐநா சபையில் உக்ரைனுக்காக இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News