சீரியல் அதிபராகி, நிஜத்தில் உக்ரேன் அதிபராக 'ஸெலன்ஸ்கி' மாறியது எப்படி!

உக்ரேன் அதிபராக வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதன் முதலாக சீரியல் தொடர் ஒன்றில் அறிமுகமானார். அது பிரபலமான நகைச்சுவைத் தொடர் ஆகும்.

Update: 2022-02-26 14:36 GMT

உக்ரேன் அதிபராக வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதன் முதலாக சீரியல் தொடர் ஒன்றில் அறிமுகமானார். அது பிரபலமான நகைச்சுவைத் தொடர் ஆகும். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது நிஜ வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதாவது அவர் உண்மையாகவே உக்ரைன் நாட்டின் அதிபராகவே மாறினார். தற்போதைய நிலையில் 4 கோடியே 40 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் போரை திறம்பட வழி நடத்தி வருகின்றார். இருந்த போதிலும் ரஷ்யப் படைகள் உக்ரைனில் அத்துமீறி நுழைந்து சண்டையிட்டு வருகிறது.

முதன் முதலில் 'செர்வெண்ட் ஆஃப் தி பீப்பிள்' தொடரில் வரலாற்று ஆசிரியராக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும், ஊழலுக்காக அவர் பேசிய வீடியோ வெளியாகிய பின்னரும் அந்த சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பை பார்த்து அந்நாட்டு மக்கள் வியந்தனர். இதனால் அரசியலில் மாற்றம் தேவை என உக்ரேனிய மக்கள் விரும்பினர். காலப்போக்கில் செர்வெண்ட் ஆஃப் தி பீப்பிள் என்பது அவரது கட்சியின் பெயரும் மாறியது. முதன் முதலாக அரசியலில் நுழைந்த ஸெலென்ஸ்கி கிழக்கு உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதாக கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்து அதிபரானார்.

இதனிடையே தற்போதைய நிலையில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை முடிந்தவரை எதிர்கொண்டு வருகின்றார். தனது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக உலக நாடுகளிடமும் உதவியை எதிர்நோக்கி வருகின்றார். போர் இருந்தபோதிலும் மக்களை பீதியில் ஆழ்த்தாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இவர் க்ரைவிரியில் யூத பெற்றோர்களுக்கு பிறந்த ஸெலென்ஸ்கி, கீவ் தேசிய பொருளாதா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இளைஞராக அவர் ரஷ்ய தொலைக்காட்சியில் ஒரு போட்டி குழு நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2003 ஆம் ஆண்டில், அவர் தனது நகைச்சுவைக் குழுவான 'க்வார்டல் 95' என்ற பெயரில் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்த்தின் இணை நிறுவனர் ஆனார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு வரை தொலைக்காட்சி சீரியல் மற்றும் திரைப்படங்களில் தனது வாழ்க்கை பயணத்தை ஸ்லென்ஸ்கி நடத்தி வந்தார். இதன் பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற கொந்தளிப்பான நிகழ்வுகளால் அரசியல் எழுச்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். உக்ரேனின் ரஷ்யா சார்பு அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கிரைமியாவைக் ரஷ்யா கைப்பற்றியது. மேலும், பிரிபினைவாதிகளை ஆதரித்தது. தற்போது வரை அந்த சண்டையானது தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து 2015ம் ஆண்டு அக்டோபர் சர்வண்ட் ஆஃப் தி பீப்பிள் என்கின்ற சீரியல் ஒளிபரப்பானது. அந்த கதாபாத்திரத்தில் அதிபராகவே காட்சி அளித்தார். அது நிஜ வாழ்க்கையிலும் அதிபராக காட்சி அமைந்தது.

அதாவது அப்போது இருந்த அதிபர் பெட்ரோ பொரோஷென்கோவை தோல்வி அடைய செய்தார். அவர் தனது போட்டியாளரை அரசிலுக்கு புதிது என்று சித்தரிக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அதனை பொதுமக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதைய தேர்தலில் 73.2 சதவீத வாக்குகளுடன் ஸெலென்ஸ்கி 6வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருவர் சினிமாவில் நடித்தாலும் மக்களின் தேவைகளை அறிந்து நடந்தால் ஒரு நாட்டின் அதிபராக வரலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

Source, Image Courtesy: BBC 

Tags:    

Similar News