நான் எங்கும் ஓட மாட்டேன்: செல்பி வீடியோ வெளியிட்டு ரஷ்யாவை மிரட்டும் உக்ரைன் அதிபர்!

Update: 2022-02-27 04:04 GMT

ரஷய் படைகளிடம் சரணடையும்படி தனது ராணுவப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருப்பதாக நேற்று முதல் தகவல் வெளியாகியது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், நாங்கள் யாருக்காகவும் அடிபணிய மாட்டோம்; சரணடையவும் மாட்டோம் என்று வீர வசனத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதனிடையே ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரான் கீவ் நகரை நெருங்கி வருகிறது. இதனால் விரைவில் கீவ் நகரை கைப்பற்றி விடும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாக ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது அவர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்து விடுங்கள் என கூறினார் என்பதுதான் அந்த தகவல்.

https://twitter.com/i/status/1497450853380280320

இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். கீவ் நகரில்தான் உள்ளேன். எனது நாட்டின் மக்கள் மற்றும் வருங்கால குழந்தைகளுக்காக நான் தொடர்ந்து சண்டையிடுவேன் என்றார். சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும், நாங்கள் யாருக்காகவும் அடிபணிய மாட்டோம். சரணடையவும் மாட்டோம். இது எங்களின் நிலம் என்று ஆக்ரோஷமான பதிலை வெளிப்படுத்தினார்.

Source: Twiter

Image Courtesy: The Moscow Times

Tags:    

Similar News