இந்தியர்களை மீட்க ஆப்ரேசன் 'கங்கா' என பெயரிட்ட மத்திய அரசு!

Update: 2022-02-27 10:20 GMT

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஆப்ரேசன் கங்கா என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. ரஷ்யா நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதலில் உக்ரைனில் பல்வேறு நகரங்கள் சீர்குலைந்துள்ளது. பல உயிர் சேதங்களும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் முறையாக சென்றவர்கள் என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருப்பதாக தெரியவந்தது. அதன்படி மாணவர்களை முதற்கட்டமாக அண்டை நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மூலமாக மீட்டு வருகிறது.

இது போன்று மீட்பதற்கு மத்திய அரசு கங்கா என்ற நதியின் பெயரை வைத்துள்ளது. இது போன்று இக்கட்டமான நேரங்களில் இந்தியர்களை மீட்பதற்கு ஒவ்வொரு பெயரை வைத்து அதன்படி அதிகாரிகள் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News