உக்ரைனில் நிறுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை அழித்த ரஷ்யா!

உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை ரஷ்ய படைகள் குண்டுவீசி அழிக்கப்பட்டுள்ள சம்பவம் உக்ரைன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-28 06:49 GMT

உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை ரஷ்ய படைகள் குண்டுவீசி அழிக்கப்பட்டுள்ள சம்பவம் உக்ரைன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக ராணுவ தளங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

அதே போன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அண்டோனாவ் அன் மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி அழித்துள்ளது. இதன் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால் 22 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விமானம் தற்போது அழிக்கப்பட்டதாக உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News