கீவ் மக்கள் வெளியேறலாம்: ரஷ்ய ராணுவம் திடீர் அறிவிப்பு!
உக்ரைனில் கடந்த 5வது நாளாக தொடர்ந்து தாக்கும் ரஷ்ய படைகள் திடிரென்று போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலியை நிறுத்தியது.
உக்ரைனில் கடந்த 5வது நாளாக தொடர்ந்து தாக்கும் ரஷ்ய படைகள் திடிரென்று போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலியை நிறுத்தியது. இதனால் தலைநகர் கீவில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று ரஷ்ய படை அறிவித்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோவில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை செய்தது. ஆனால் இதனை பொருட்படுத்தாத உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 24ம் தேதி தனது முதல் தாக்குதலை தொடர்ந்து பின்னர் போரின் வேகத்தை அதிபர் விளாடிமிர் புடின் தீவிரப்படுத்தினார். இதனால் நாளாபுறமும் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் உக்ரைன் தலைநகரான கீவில் ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்தனர். சிலர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 28) நடைபெற இருந்த நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் குறைந்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியது. இதனால் போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் பல நகரங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவில் ஊரடங்கும் விலக்கப்பட்டது. அங்கு போர் விமான தாக்குதலின் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. இதனால் கீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய படைகள் அறிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட மக்கள் சாலை மார்க்கமாக மற்றொரு நாட்டை தேடி அகதிகளாக வெளியேறத்தொடங்கியுள்ளனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Source: Dinamalar
Image Courtesy: Pinterest