இந்தியா போன்று பொருளாதார வலிமையான நாட்டை காண முடியாது: இலங்கை அகதிகள் பேச்சு!

Update: 2022-03-23 11:57 GMT

இலங்கையில் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கே பெரும்பாடக உள்ளது. உணவு வகைகளின் விலை பல மடங்கு ஏறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் இந்தியாவை நோக்கி இலங்கை அகதிகள் கூட்டம், கூட்டமாக வருகை தருகின்றனர்.

இலங்கையில் சரிவர ஆட்சி செய்யாத காரணத்தினால் பொருளாதா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பொருட்களின் விலையை கேட்டாலே கண்களில் தண்ணீர் வருகிறது. இதனால் சாதாரண மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை திண்டாடும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கையை விட்டு இந்தியாவுக்கு தப்பிச்சென்றாலே உயிர் வாழலாம் என்ற எண்ணத்தில் பலர் தப்பித்து வருகின்றனர். அது போன்று யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த கஜேந்திரன் அவரது மனைவி மரியகிலாரி, மற்றும் நிசாஜ் 4 மாத கைக்குழந்தை, மற்றும் தியுரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்டோர் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள மணல் தீடையில் வந்து தஞ்சமடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை அகதிகளை மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்தனர். இலங்கை குறித்து அகதி கஜேந்திரன் கூறும்போது: இலங்கையில் ஒரு நாள் கூலி ரூ.500 ஆனால் அங்கு ஒரு கிலோ பால் பவுடர் ரூ.900, அரிசி கிலோ ரூ.230, சிலிண்டர் ரூ.4,200 என்று மும்மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவுக்கு சென்றால் உயிர் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் வந்தோம். எங்களை போன்று இன்னும் பலர் வருகை புரிவதற்கு தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News