பாகிஸ்தானில் பெரும்பான்மை இழந்தது இம்ரான்கானின் அரசு: விரைவில் ஆட்சி கவிழ்கிறது!

Update: 2022-03-30 03:43 GMT

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சி விலகியதால் பெரும்பான்மையை இழந்துள்ளது. விரைவில் ஆட்சி கவிழும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Full View

பாகிஸ்தானில் இம்ரான்கான் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியை கைப்பற்றினார். இவர் பதவிக்கு வந்த நாள் முதல் சர்ச்சையை உருவாக்கி கொண்டிருந்தார். பொருளாதார ரீதியில் எந்த ஒரு கட்டமைப்பையும் செய்யாமல் இருந்து வந்தார். இதனால் அந்நாடு மிகப்பெரிய கடனாளியாக மாறியுள்ளது.

இதனால் பெரும்பாலன மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனிடையே இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் கட்சியினரே கொண்டு வந்தனர். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறுவதற்கு முன்பே கூட்டணி கட்சியான எம்.எம் என்ற கட்சி இம்ரான்கானுக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு தனது ஆதரவை அளிப்பதாகவும் எம்எம் கட்சி அறிவித்துள்ளது. இதனால் விரைவில் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: DNA India

Tags:    

Similar News